
மதுரை முழுவதும் சிந்தாமணி 59 வது வட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போஸ்டர்கள்..
மதுரை :
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு மக்கள் ஆதரவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை பல அரசியல் கட்சிகள் ஆதரித்து வருகிறது அரசியல் மறுபுறம் எதிர்ப்பையும் தீவிரமாக விஜய் அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்.
மதுரை சிந்தாமணி 59வது வட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மதுரை முழுவதும் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
“உண்மை ஒருநாள் வெல்லும்… இந்த உலகம் உன் பேர் சொல்லும்…” என்ற வாசகத்துடன் வெளிவந்த இந்த போஸ்டர்கள்,
கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் உருக்கமாக பேசியது “மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க…
CM சார்… பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம் – கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்.
பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை; என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை.
இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம்; இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம்.
“என்னுடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்” உண்மை ஒரு நாள் வெளிவரும்.
5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன்; கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து எனக்கு சொல்வதுபோல் இருந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதுரை முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், விஜய்க்கு மக்கள் தரப்பில் உருவாகும் வலுவான ஆதரவின் சின்னமாக திகழ்கின்றன.






