
கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழு நாட்கள் நாட்டு நல பணித் திட்ட முகாம் தொடக்க விழா.!
கடம்பத்தூர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நாட்டு நலப் பணி திட்ட முகாம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்கவிழா இன்று நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை குமாரிக்குட்டி தலைமை தாங்கினார் , முகாம் திட்ட ஒருங்கிணைப்பாளர் நெப்போலியன் அனைவரையும் வரவேற்றார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜசேகர் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரம்யா , உறுப்பினர் மகேந்திரன் ஆசிரியை ஜாய்ஸ்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கடம்பத்தூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி கடம்பத்தூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ருக்குமாகதன் தமிழ்நாடு அரசு ஊரியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் , மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அமுதா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மேலும், திட்டப் பணிகள் காலை 9.30மணி முதல் பிற்பகல் 12.30 வரை நடபெறுகிறது 26.09.2025 முகாம் துவக்க விழா, 27.09.2025 முகாம் வளாகத் துதூய்மைப் பணி, 28.09.2025 கடைவிதித் தூய்மைப் பணி, 29.09.2025 அரசு மருத்துவமனை பார்வை மற்றும் வளாகத் தூய்மைப் பணி, 30.09.2025 கடம்பத்தூர் அரயில் நிலையத் தூய்மைப் பணி, 01.10.2025 திருத்தனாங்கள் துய்மைப்பணி, 02.10.2025 முகாம் நிறைவு விழா என முகாம் திட்டம் குறித்து விவரித்தும் மேலும் ஒவ்வொரு நாளும் திட்டப்பணி முடிந்து தினம் ஒரு தலைப்பில் கருத்துரையாளர்களை வரவழைத்து கல்வி வளர்ச்சி , சேமிப்பு , போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு என பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
என திட்ட ஒருங்கிணைப்பாளர் நெப்போலியன் தெரிவித்தார், தொடக்கவிழாவில் ஒரு பகுதியாக பள்ளி வளாகம் முழுவதும் 100 மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கிவைத்தனர்.
முடிவில் உதவி திட்ட அலுவலர் வாணி நன்றி தெரிவித்தார்.






