March 2, 2026
போடிநாயக்கன்பட்டி பெரியாறு பாசன கால்வாய் பகுதியில் மரக்கன்று நடவு

போடிநாயக்கன்பட்டி பெரியாறு பாசன கால்வாய் பகுதியில் மரக்கன்று நடவு

வாடிப்பட்டி, செப்.20.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வனம் நலம் இயக்கம் சார்பாக பூமி வெப்பமயமாவதை தடுக்க ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தின் படி முதல் கட்டமாக குலசேகரன் கோட்டை பெருமாள் கண்மாய் பகுதியில் ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமையில் மரக்கன்று நடவும் பணி தொடங்கி 123 புங்கை, நாவல், அத்தி, அரசு,வேம்பு, புளி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதன் பின் தொடர்ந்து, வாடிப்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் 350 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட் டது.

இந்நிலையில், நேற்று போடிநா யக்கன்பட்டி ஊரணி அருகில் தொடங்கி பெரியார் பாசன கால்வாய் கரைப்பகுதியில் முடிய 50 மரக்கன் றுகள் என இதுவரை மொத்தம் 400 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பொது மக்களுக்கும் இயற்கையை காக்க வேண்டும் என்ற எண்ணத் தை உருவாக்க பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நினைவில் நிற்கும் விதமாக மரக்கன்றுகள் வாங்கி கொடுத்து ஏராளமான பொதுமக்கள் உதவி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள், தங்கராசு, ஈஸ்வரன், கணேசன், சங்க ரபாண்டி, ஹரீஷ். தினகரன், மணிகண்டன், துரைப் பாண்டி, விக்னேஷ், ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற தாசில்தார் இராமன், டாக்டர் தீபக், பிரகாஷ், குணா, ஆட்டோ ராஜேந்திரன், ஆனந்த், கோபி, பொன்னையா, இ.பி.ராமன் குடும்பத்தார், பொன்.பனகல் பொன்னையா, அரண்மனையார், இராம. கஜேந்திரன் மற்றும் போடி நாயக்கன்பட்டி கிராமத்தினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *