
வாடிப்பட்டியில் "இளைஞர் அணி கலைஞர் நூலகம்" அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார் :
வாடிப்பட்டி, செப்.14-
தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் திறக்கப்படும் என இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஒவ்வொரு தொகுதி வாரியாக கலைஞர் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கான கலைஞர் நூலகம் வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் பல்வேறு வகையான நூல்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களுடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தை மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து நூலகத்தை பார்வையிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பாரகு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, வெங்கடேசன் எம்.எல். ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.இளங்கோ வரவேற்றார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்தியபிரகாஷ், ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், தன்ராஜ், முத்தையன், பொதும்பு தனசேகர், அருண்குமார், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஜெயராமன், துணை சேர்மன்கள் கார்த்திக், சாமிநாதன், முன்னாள் பேரூர்செயலாளர் மு.பா.பிரகாஷ், முன்னாள் பேரூராட்சி சேர்மன் கிருஷ்ணவேணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் குமரேசன், அன்புச்செல்வன், ஐயப்பன், மருதுராஜா, வண்ணி முத்துப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நல்லதம்பி, அரவிந்தன்,பேரூர் இளைஞர் அணி வினோத், உள்பட திமுக நிர்வாகிகள்,இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
முடிவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.






