March 2, 2026
உசிலம்பட்டியில் பிரமலைக் கள்ளர்களிடம் பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்க நடக்கும்போது - கூட்டத்தில் நிலக்கோட்டையில் 100 பேர் செல்ல முடிவு !

உசிலம்பட்டியில் பிரமலைக் கள்ளர்களிடம் பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடமைகளையும் மீட்க நடக்கும்போது - கூட்டத்தில் நிலக்கோட்டையில் 100 பேர் செல்ல முடிவு !

நிலக்கோட்டை, செப்.12-

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நாளை 13.9.2025 மாலை முருகன் கோவில் அருகே பிரமலைக் கள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளையும், உடைமைகளையும் மீட்க பொதுக்கூட்டம் கள்ளர் பள்ளி முன்னாள் மாணவர்கள் நல சங்கம் சார்பாக நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கள்ளர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நிலக்கோட்டை பகுதி பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு நிறைய அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரமலைக்கள்ளர்கள் உரிமையையும் உடமையும் மீட்கும் போராட்டத்தில் சுமார் நூறு பேர்கள் கலந்து கொள்வது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் முருகன், மாநில பொருளாளர் இளங்கோ, மூத்த கௌரவ தலைவர் பொன்னையா, மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தி, சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *