March 2, 2026
ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

வாடிப்பட்டி, செப்.6-
மதுரை மாவட்ட கிளை தமிழ்நாடு தொடக்கபபள்ளி ஆசிரியா கூட்டணி சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் பாரதி சிங்கம் தலைமை தாங்கி டாக்டர் ராதாகிருஷ்ணனின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.

இதில் ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அர்ஜுனன், இளையராஜா, ஆடம்ஸ், வெங்கட்ராமன், முரளி, சரவணக்குமார்,பரமேஸ்வரன், பீட்டர்,ஜெபதுரை, உதயக்குமார், தட்சினா மூர்த்தி,சார்லட் சவுரி சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *