
அலங்கா நல்லூர் அருகே வ.உ.சி சிலைக்கு, சோழவந்தான் எம்.எல்.ஏ.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அலங்காநல்லூர், செப்:6.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி கிராமத்தில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளை 154 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல் .ஏ.மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், ஒன்றியச் செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், முத்தையன், அருண் விஜயன்
மற்றும் நகரச் செயலாளர் ரகுபதி பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ்,
துணைத் தலைவர் சாமிநாதன், இளைஞர் அணி சந்தன கருப்பு தவ சதீஷ் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பண்ணைகுடி தனுஷ்கோடி, அ.தி.மு.க. சார்பாக ஒன்றியச்
செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமையில், கார்த்திக், செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கத்தின் சார்பாக கௌரவத் தலைவர் எஸ்.டி.எம். செந்தில்குமார், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் குமரேசன் உறுப்பினர்கள் பூமிநாதன்,
தங்கம், வீரபுத்திரன், கிருஷ்ணன், மனோகரன், நாகராஜ். தங்கராஜ். மகேந்திரன்
உருப்பட பலர் கலந்து கொண்டு மாலை நேரத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்து முன்னணி சார்பாக , மாவட்ட செயற்குழு உறுப்பினர் புறநகர் அலங்கை ஒன்றியம் சிவக்குமார், ஒன்றியத் தலைவர் சுரேந்திரன், கிளைத் தலைவர் குமார், கிளை ஒருங்கிணைப்
பாளர் மீனாட்சி சுந்தரம். மயில்வாகனம், கிளைச் செயலாளர் குமார், மற்றும் இந்து
முன்னணியில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாலமேடு வா. உ .சி. இளைஞர் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.
ஓபிஎஸ் அணி சார்பாக, மாவட்டச் செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர்கள் சேது சீனிவாசன், திரவியம் தட்சிணாமூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் தனபால், பாலமேடு சேகர், பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. ஜெயச்சந்திர மணியன், முத்துகிருஷ்ணன் குமார், அலங்காநல்லூர் ஒன்றிய வ. உ. சி. பேரவையின் தலைவர் சதீஷ் அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






