June 20, 2026
பழனியில் மனிதநேயத்துடன் மருத்துவ உதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தவெக நிர்வாகி…

பழனியில் மனிதநேயத்துடன் மருத்துவ உதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தவெக நிர்வாகி…

பழனி : ஜூன்,20

திண்டுக்கல் மாவட்டம் பழனி குபேரப்பட்டணம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் தேவஸ்தான ஊழியராக பணி செய்து வருகிறார்.

முன்னதாக இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கோவை தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவரின் சிகிச்சைக்கு 5 லட்சம் வரை பணம் தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில்

வறுமையில் வாடிக் கொண்டிருந்த தினேஷ் குமார் பழனி நகரில் பல்வேறு நபர்களிடமும், சமூக வலைதளங்களிலும் உதவி கேட்டிருந்தார்.

இதனிடையே இந்த தகவலை கேள்விப்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிபாலன் தனது கட்சி நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் நகர செயலாளர் மீதுன் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் நகர துணை செயலாளர் மாரிமுத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு தினேஷ் குமாரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.

அது மட்டுமின்றி மருத்துவ செலவிற்காக பழனிபாலன் இரண்டு லட்ச ரூபாயை வழங்கினார்.

மேலும் மருத்துவ தேவைக்காக பணம் எதிர்பார்த்த நிலையில் இரண்டு லட்ச ரூபாயை தவெக நிர்வாகி பழனி பாலன் வழங்கியதற்கு தினேஷ்குமார் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மருத்துவ சேவை, கல்வி சேவை, பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை பழனிபாலன் செய்து வரும் வேளையில், ஒருவரின் உயிரை காப்பாற்ற மருத்துவ உதவி செய்ததை சமூக ஆர்வலர்களும் பழனி மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *