
பழனியில் அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கப்பட்டது...
பழனி : நவம்பர்,25
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மலை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

முன்னதாக மழைக்காலம் தொடங்கியதால் தூய்மை பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக நகராட்சிக்கு உட்பட்ட 15,16,17,26,ஆகிய வார்டுகளில் பணிபுரியும் பிரிவு இரண்டு மண்டல தூய்மை பணியாளர்கள் 27 நபர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இந்நிகழ்வின் தலைமையாக அறக்கட்டளை தலைவர் முகமது உசேன் செயலாளர்
சையது இப்ராஹிம் பொருளாளர் குழந்தைவேல் இணைச் செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா ரவிவர்மா கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்களை வழங்கினர்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மழைக்காலத்தில் உரிய நேரத்தில் இதுபோன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வரும் அன்புள்ளம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்…
பழனி நிருபர் : நா.ராஜாமணி.






